இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துணியை பெட்ரோலில் நனைத்து காரின் நான்கு பக்கங்களிலும் துடைத்து உள்ளார். அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்துவதும் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை மதுரவாயலில் தனது காருக்கு தீ வைத்துவிட்டு மர்மநபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். காரை விற்றுவிட்டு நகை வாங்கித்தரும்படி மனைவி தொல்லை கொடுத்ததால் காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.