24 மணி நேர மது விற்பனைதான் திராவிட மாடலா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:39 IST)
இருபத்தி நான்கு மணி நேரமும் தொடர்ச்சியாக மது விற்பனை செய்வதுதான் திராவிட மாடலா என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
24 மணி நேரமும் மருத்துவத்திற்கு சேவை இருக்க வேண்டும் என்றும் ஆனால் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது என்றும் பள்ளிக்கூடங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடக்கிறது என்றும் பல தொகுதிகளில் இதுபோன்ற நிலை தான் உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ள நிலையில் டாஸ்மாக் விற்பனை நிலையங்களை பயன்படுத்தி திமுக அரசு ஊழல் செய்கிறதோ என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் நேர கட்டுப்பாடு இல்லாமல் விற்கப்பட்டு வருகின்றன என்றும் இந்த பணம் திமுகவின் கஜானாவுக்கு செல்கிறது  என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுதான் திராவிட மாடலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்