சேலத்தில் ரூ.20 லட்சம் புதிய 2000 நோட்டுகள் பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (18:39 IST)
சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல்துறையினரிடம்  ரூ.20 லட்சம் புதிய 2000 நோட்டுகள் சிக்கியது.


 

 
சேலம் மாவட்டத்தில் தமிழகத்தில் முதன்முதலாக புதிய 500 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டது குற்ப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
 
அப்போது வாகனம் ஒன்றில் ரூ.20 மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது. வாகனத்தில் ஓட்டிவந்த ஓட்டுனரிடம் விசாரித்த போது, பாஜக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
 
பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பணத்தை சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து பாஜக பிரமுகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்