தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய உயர்வு பரிந்துரைப்படி 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறைந்தப்படசம் ஊதியம் ரூ.6,100யில் இருந்து ரூ.15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.77,000யில் இருந்து ரூ.2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வை 2016ஆம் ஆண்டிலிருந்து கருத்தியலாக அமல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.