தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

திங்கள், 24 ஏப்ரல் 2017 (18:53 IST)
தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அர்சுக்கு நிகரான ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அரசு ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர். மத்திய அரசுக்கு நிகரான ஊதியம் அம்ற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு ஊழியர் சங்கம் தெரிவிக்கப்பட்டதாவது:-
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசிடம் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டல் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்து இருந்தோம்.
 
இவ்வாறு தமிழக அரசு ஊழியர் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்