மத்திய அரசுக்கு இணையான சம்பளம்: தமிழக அரசு ஊழியர்கள் குஷி

செவ்வாய், 23 மே 2017 (06:03 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு நிதி ஆதாரத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்தாலும் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை பெறுவதற்காகவும் அவ்வப்போது அதிரடி திட்டங்களை வெளியிட்டு வருகிறது.



 


அந்த வகையில் தற்போது அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம், 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் தரவேண்டும் என்று கோரியுள்ளது.

இந்தத் தகவல் கிடைத்த பின்னர் மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் தமிழக அரசு ஊழியர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்