இந்நிலையில் பாரிஸ் கார்னர் பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து 143 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் போலிஸ் சோதனையில் சிக்கியுள்ளன. இந்தக் குற்றத்துக்காக எஸ்.கே. டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரியில் சுமார் 300 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. சென்னையில் இருந்து மிக அருகில் உள்ளதால் அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தல் நடைபெறுவதாக தெரிகிறது.