மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (17:34 IST)
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் போலீஸாரால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
 
இவர் மீது 23 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் 55 நாட்கள் வேலூர் சிறையில் இருந்தார்.
சிறையில் திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் திருமுருகன் காந்திக்கு மருத்துவமணையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சென்னை, எழும்பூர்,செங்கல்ப்ட்டு நீதிமன்றங்கள்இன்று அவருக்கு  ஜாமீன் தந்ததை தொடர்ந்து  சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
 
அவரது ஆதரவளர்கள் திருமுருகன் காந்தி விடுதலையாக போகிற பதிவை சில  மணிநேரங்களுக்கு முன்பே இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்