அரசு அலுவலகங்களில் சிக்கிய ரூ.4.29 கோடி: 16 அரசு அலுவலர்கள் கைது!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:04 IST)
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடி வருவதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி லஞ்சம் வாங்குபவர்களை பிடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் ஆறாம் தேதி வரையிலான காலத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் அரசு அலுவலகங்களில் மட்டும் ரூபாய் 4.2 கோடி சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனையில்  ரூபாய் 4.2 கோடி லஞ்சப்பணம் சிக்கியுள்ளது. மேலும் சோதனையில் லஞ்சம் பெற்றதாக பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது 
 
ஒரே மாதத்தில் நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சப் பணம் சிக்கியதும், 16 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்