யாருய்யா நீ.. பிறந்தமேனியா போட்டோ அனுப்புற? – பகீர் கிளப்பிய ஆசாமி கைது!

சனி, 7 நவம்பர் 2020 (16:07 IST)
கர்நாடகாவில் பல மொபைல் எண்களுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தெரியாத மொபைல் எண் ஒன்றிலிருந்து புகைப்படங்கள் சில வந்துள்ளன. அதை டௌன்லோட் செய்து பார்த்தபோது வயதான நபர் ஒருவரின் நிர்வாண படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸில் அவர் புகார் அளித்த நிலையில் அந்த எண்ணை ட்ரேஸ் செய்த போலீஸார் 54 வயதான ராமகிருஷ்ணா என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் ராமகிருஷ்ணா குத்துமதிப்பாக சில எண்களை தொடர்பு கொண்டதாகவும் அந்த எண் உபயோகத்தில் இருந்தால் அந்த எண்ணுக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பியதாகவும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் 200க்கும் அதிகமானோருக்கு இதுபோல அவர் புகைப்படங்களை அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்