இதுகுறித்து தகவல் அறிந்து . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில் 4 துணை சூப்பிரண்டுகள் தலைமையில், 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா சென்றனர்.
இந்நிலையில், டீக்கா ராமன் என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.