வேதா இல்லம் வழக்கு; மேல்முறையீடு செய்யமாட்டோம்! – தமிழக அரசு பதில்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (15:56 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் வாழ்ந்து வந்த அவரது வேதா இல்லத்தை அப்போதைய அதிமுக அரசு அரசுடமையாக்கி சட்டம் இயற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் உறவினர் தீபா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையில் வேதா இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அங்கும் தீபாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு வர வேதா இல்லம் சாவி தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வேதா இல்லம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யபோவதில்லை என தற்போதைய திமுக அரசு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இருவேறு அமர்வுகளின் உத்தரவையும் ஏற்பதால் மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்