சென்னையில் ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு - காவல் ஆணையர்

திங்கள், 1 ஜூன் 2020 (18:43 IST)
தமிழகத்தில்  22,333 பேர் கொரொனாவால் பாதிக்கபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 என உயர்ந்துள்ளது நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1149 பேர்களில் சென்னையில் 804 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில்  சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சென்னையில் தீவிரமாக கொரோனா பரவிவருவதை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் 144 உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்