மாணவி மரணத்தால் வன்முறை எதிரொலி: ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (15:03 IST)
மாணவி மரணத்தால் வன்முறை எதிரொலி: ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் என்ற பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்து பள்ளியின் பேருந்துகள் தீ வைக்கப்பட்டன என்பதும், பள்ளி சொத்துக்கள் சூறையாடப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக சின்ன சேலம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன, கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம், நயினார்பாளையம் ஆகிய பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது
 
மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறையை கைவிட்டு அமைதி வழியில் போராட இறந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைதியான முறையிலேயே நீதியைப் பெற விரும்புவதாகவும் மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்