இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில், கடந்த 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடத்தப்பட்ட சோதனையில், 1223 ஆம்னி பேருந்துகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.