சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது; 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முடித்துவைப்பு

Arun Prasath

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (12:02 IST)
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 2017ல் நடைபெற்றபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் 11 உறுப்பினர்கள் மீது சட்டப்பேரவை தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை அதனால் அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை என்று கூறி தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது. மேலும் சபா நாயகர் உரிய முடிவை எடுப்பார் என்றும்,  நடவடிக்கை எடுக்க சபா நாயகருக்கு காலக்கெடு எதுவும்  விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்