பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல் தேர்ச்சி விகிதத்தில் சாதனை செய்த மாணவிகள்..!

Mahendran

திங்கள், 6 மே 2024 (10:06 IST)
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம்போல் மாணவிகள் மாணவர்களை விட அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டதை அடுத்து சற்று முன் இந்த தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. 
 
இதனை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவர்கள் தேர்ச்சி 92.37 சதவீதம் என்றும் மாணவிகள் தேர்ச்சி 96.4  என்றும், இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
 
மேலும் தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 94.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்