பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைவாக இருந்ததை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த ராஜசேகர் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து புதிய காரைக்கால் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக விஜய மோகனா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விதம் குறைவாக இருந்தால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்படும் நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.