தமிழ்நாட்டில் இன்று பத்தாவது மெகா தடுப்பூசி முகாம்

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:47 IST)
தமிழகத்தில் கடந்த ஒன்பது வாரங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
அந்த வகையில் இன்று பத்தாவது தடுப்பூசி மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் தொடங்கியுள்ளதாகவும் சென்னையில் மட்டும் 1600 இடங்கள் இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த தடுப்பூசி முகாம் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் டோஸ் இதுவரை போடாதவர்கள் இந்த தடுப்பூசி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்களும் இன்றைய மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்