இயக்குனர் அமீர் ஆதிபகவன் படத்துக்கு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா மற்றும் அமீர் நடிப்பில் சந்தனத் தேவன் என்ற படத்தை அறிவித்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தினார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகளால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் இப்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த படத்தை நடிகர் ஆர்யாவே தன்னுடைய ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார்.