100% பார்வையாளர்களை அனுமதிப்பது சரியான முடிவு அல்ல: டாக்டர் ராமதாஸ்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (11:02 IST)
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது கொரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்
 
சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மருத்துவர்கள் மற்றும் ஒரு சில திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிப்பதே தற்போதைக்கு சிறந்த நடவடிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்
 
இந்த நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் இது குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் நேற்று முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஜவாஹிருல்லாஹ் கண்டனம் தெரிவித்தார். தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் இது குறித்து கூறிய போது, ‘திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது கொரோனா வைரஸ் பரவலை வேகப்படுத்தும் என்றும் இது சரியான முடிவு அல்ல என்றும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே மத்திய அரசு திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தது விதி மீறலை மீறியதாகவும் உடனடியாக இவற்றை திருத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்