ஓராண்டுக்குள் 1,00,000 இலவச விவசாய மின் இணைப்பு - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (15:54 IST)
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான  ஸ்டாலின், TANGEDCO தலைமை அலுவலகத்தில், ஓராண்டுக்குள் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்ற வேளாண் பெருமக்களோடு கலந்துரையாடிய விழாவில் கலந்துக்கொண்ட எரிசக்கித்துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. ரமேஷ்சந்த் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஓராண்டில் ஒரு லட்சம்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், மின் இணைப்பு  மூலம் விவசாயிகள் பெறும்பலனே அரசுக்கு கிடைக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைத்துள்ளது.

ஓராண்டிற்குள்ளாகவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புத் தந்து சாதனை படைத்துள்ளோம்.

ஒரு லட்சமாவது விவசாயி உளுந்தூர்பேட்டை கண்ணப்பிள்ளைக்கு மின் இணைப்பு ஆணையை முதல்வர் வழங்கினார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு  வழங்கும் திட்டம் 2021 செப்டம்பர்  23 -ல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்