ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி மரணம்....

புதன், 2 பிப்ரவரி 2022 (20:36 IST)
கடந்தாண்டு செம்டம்பரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் ஒரு சிறுமியும் அவரது பெற்றோர் மற்றும் அண்ணன்  அங்குள்ள 7 ஸ்டார் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் வீட்டிற்குச் சென்ற அனைவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. எனவே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில், சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து ஓட்டலில்  உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டலும் மூடப்பட்டது.

 இந்த  நிலையில், ஓட்டலில் சாப்பிட்ட 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதேபோல் வாந்தி ,மயக்கம் ஏற்பட்டுள்ளதற்கு  அந்த ஓட்டலில் இறைச்சி மற்றும் தண்ணீர் பிரச்சனைதான் காரணம்  என தெரியவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்