வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

புதன், 2 பிப்ரவரி 2022 (19:23 IST)
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை வண்டலூர் பூங்கா நாளை முதல் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்