இதை செய்தால் போதும்: சென்னை மெட்ரோ ரயிலில் 50% தள்ளுபடி!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (19:48 IST)
சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்ய புதிதாக தொடங்கப்பட்டுள்ள செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 10% முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மெட்ரோ ரயில் என்ற புதிய செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் மூலம் தினசரி டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர பாஸ் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்த செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பயண டிக்கெட்டுக்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் க்யூ.ஆர். மூலம் டிக்கெட் எடுத்தால் 20 சதவீதம் வரை தள்ளுபடியும் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் 50 சதவீதம் தள்ளுபடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
உதாரணமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமென்றால் 70 ரூபாய் டிக்கெட் கட்டணம் ஆகும். ஆனால் கியூ ஆர் மூலம் டிக்கெட் எடுத்தால் ரூபாய் 56 ரூபாய் மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விம்கோ நகர் முதல் விமான நிலையத்திற்கு காரில் சென்றால் 800 ரூபாயும் ஆட்டோவில் சென்றால் 500 ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறைந்த செலவில் எந்தவித டிராபிக் பிரச்சனையும் இன்றி குளுகுளு ஏசி வசதியுடன்  வெறும் 56 ரூபாயில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தள்ளுபடி காரணமாக மெட்ரோ ரயிலின் செயலின் மூலம் அதிக பயணிகள் டிக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்