திருச்செந்தூர் கடல், அவ்வப்போது திடீரென உள்வாங்கும் நிகழ்வுகள் நடந்துவரும் நிலையில், தற்போது சுமார் 50 அடிக்கு கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த அபாயத்தை உணராமல், பொதுமக்கள் செல்பி மற்றும் வீடியோ எடுப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று திருச்செந்தூரில் திடீரென 50 அடிக்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக பாசி படிந்த பாறைகள் வெளியே தென்படத் தொடங்கின. இந்த நிலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் பாசி பாறைகளின் மேல் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பிகள் எடுத்தனர்.
திருச்செந்தூரில் கடல் நீர் நேற்றும் உள்வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து உள்வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாசி பாறைகளை கடந்து, சில பக்தர்கள் கடலில் குளித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், பாசி பாறைகளை தாண்டி ஆழமான பகுதியில் பொதுமக்கள் குளிக்கச் செல்வது, அதிக ஆபத்தை ஏற்படுத்துவதுடன், பெரும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.