ஒடிசா ரயில் விபத்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த 10 தமிழக பயணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களது நிலைமை என்ன என்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறிய அதிர்ச்சி தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 300 பேர் வரை பலியானதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ரயிலில் வந்த தமிழக பயணிகளை அழைத்து வர நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது என்பது அந்த சிறப்பு ரயில் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த 10 பயணிகளின் நிலை என்ன என்பதை அறிவதற்காக ஒடிசா மாநில அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு மீட்பு குழு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.