பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கஜாவால் சீரழிந்து போயுள்ளன. பல மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மீட்புப்பணிகளை மேற்கொள்ள அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் கஜா புயலுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கஜாவால் பாதித்த பகுதிகளை மறுசீரமைக்க திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.