கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் செல்லாத முதல்வரை கண்டிக்கிறேன். நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. பல லட்சம் தென்னை மரங்கள் அழிந்ததால் பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரம் இழந்து விட்டனர். 4 நாட்களாக பரிதவிக்கும் மக்களை பார்க்க முதல்வருக்கு நேரமுமில்லை. மனமுமில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதாக காரணம் காட்டி கொண்டிருக்கிறார். பேரிடர் நேரத்தில் சராசரி மனிதருக்கே இதயம் துடித்துடித்து ஓடிப்போய் உதவுவார்கள்.
முதல்வராக இருப்பவர்களுக்கு மக்கள் நிலையை பார்த்து இதயம் துடித்துடித்திருக்க வேண்டாமா?. ரிப்பன் வெட்டவும் கொடி அசைக்கவும் சென்று கொண்டிருக்கிறார். புயல் பாதிப்பை பார்வையிட செல்லாத முதல்வருக்கு இருப்பது இதயமா, இரும்பா. கஜா புயல் தாண்டவமாடிய நிலையில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறார்