இந்தியாவில் முதல்முறையாக 1-பி வகை குரங்கம்மை! கேரள நபர் மருத்துவமனையில் அனுமதி!

Prasanth Karthick
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (08:45 IST)

உலகளவில் குரங்கம்மை பாதிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

 

ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கம்மை தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்தது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 10ல் ஒருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதாரம் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், எம்-பாக்ஸ் தொற்றை பொது சுகாதார நிலையாக அறிவித்தது.

 

இந்நிலையில் இந்தியாவில் கேரளாவில் முதல்முறையாக 1-பி வகை குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 வயது நபர் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

முன்னதாக அரியானாவை சேர்ந்த இளைஞர் முதல்முறையாக குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் 1-பி வகை தொற்று உறுதியாகியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்