சென்னையில் எத்தனை ரேஷன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு??

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (08:42 IST)
தமிழகத்தில் 1,35,730 பேரின் ரேஷன் கார்ட் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
அதன்படி கடந்த ஜூலை மாதத்திற்குள் மொத்தம் 7,19,895 பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்து 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரேஷன் கார்ட் வழங்கும் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாகவும், 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49920 நபர்கள் விண்ணப்பித்ததில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதேபோல் வட சென்னையில், 41431 நபர்கள் விண்ணப்பித்ததில், 16608 விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்