தலிபான்களுக்கு பெண்கள் எதிர்ப்பு

புதன், 18 ஆகஸ்ட் 2021 (22:15 IST)
ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் அவர்களுக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.

உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் பெண்கள் இருப்பதற்கு பெண்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எனவே ஆப்கானில் பெண்களுக்கு படிப்பு, அரசியல், வேலைவாய்ப்பு ஆகியவற்றையில் எந்த உரிமைகளையும் அவர்களிடம் இருந்து பறிக்கக் கூடாது என பெண்கள் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்