டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (16:17 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும்.

வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால் இந்த மாதம் முழுக்க வேலைச்சுமை, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து சகோதர சச்சரவு தீரும். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, வீடு வாங்கும் வேலை முடியும். என்றாலும் வீண் சந்தேகம், விரையம் வரக்கூடும். சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விடாமுயற்சிகள் தேவைப்படும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 15, 25
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
அடுத்த கட்டுரையில்