டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2016 (16:12 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.

பிள்ளைகளின் பிடிவாதம் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, மாறுவது நல்ல விதத்தில் முடியும்.

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆனால் மனைவிக்கு அலைச்சல், அறுவை சிகிச்சை, இரத்தப் போக்கு, வாகனச் செலவு வந்துச் செல்லும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து கால் வலி, கழுத்து வலி குறையும். சகோதரர் ஓடி வந்து உதவுவார். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளை அறிவித்து சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுப்படுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் விடுமுறை காரணங்களால் வேலைபளு கூடும். மேலதிகாரி உங்களின் செயலை உற்றுநோக்குவார். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 21
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி
அடுத்த கட்டுரையில்