எளிதான முறையில் ருசியான ஆட்டுக்கால் சூப் செய்ய !!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (15:04 IST)
தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கால் - 6
தனியா தூள் (மல்லி) - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
சீரகத் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
பூண்டு பல் - 10
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளாகாய் - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
 
இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து சேர்க்காமல் தட்டி சேர்ப்பதால் சூப்பின் சுவை அதிகரிக்கும். பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
 
தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும். 
 
இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சிறிதளவு சீரகம், 2 சின்ன  வெங்காயத்தை நன்றாக இடித்து  சேர்த்துக்  கொள்ளவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்