ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி, எலும்பு இல்லாதவாறு வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாகத் தண்ணீர்விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். கொத்துக்கறியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
வேகவைத்த கொத்துக்கறியை ஆரிய பின், அதில் தண்ணீர் இருப்பின் பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் பால், கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
இந்தக் கலவையில் கடலை மாவை சேர்த்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெய்யைக் காயவைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொறிக்கவும். சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.