மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும்.
அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை பழச் சாறு உப்பு, மீன், அரிசி, 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இறக்கினால் மீன் பிரியாணி தயார்.