முதலில் முட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் வதக்கி அரைப்பதற்கு, கடாய் வைத்து எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி துண்டு சேர்த்து வதக்கி, பின் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். பச்சை வாடை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை, சோம்பு, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் தூள் வகைகளை சேர்த்துக்கொள்ளவும். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டிப்பதம் வரும் வேளையில் வேகவைத்த முட்டையில் கீரல் போட்டு குழம்பில் போடவும். அதோடு கொத்தமல்லி தழை தூவவும். நன்கு கிளறி சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை கிரேவி தயார்.