கடாயில் எண்ணெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு 10 நிமிடம் ஊறவைத்த மிளகாய் வற்றலை அரைத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கவும். அதோடு தயிர், புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் விட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் 2 கப் தண்ணீர் 10 நிமிடம் ஊறவைத்த அரிசி, கொத்தமல்லி, புதினா சேர்த்து குக்கரில் 1 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.