முதலில் ஒரு வானலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொடியையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் பிரியும்போது, அதில் இறாலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு தயார். மேலே கொத்தமல்லி தூவி கலந்துவிட்டால் வாசனையான இறால் குழம்பு தயார்.