ராமபிரான் ராவணனை வெற்றிகொண்ட நாள் விஜயதசமி...!

Webdunia
ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அஞ்ஞாத வாசம் முடித்த பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களைப்பெற்று அம்பிகையின் அருளைப் பெற்ற சுப நாளும் இதுவேயாகும். 
பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்ஹரிக்க முடியாமல் ஈசனை எண்ணி வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசிர்வதித்து  உதவினார். அதன்படி அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். இதைக்கண்டு கொண்ட அம்பிகை  வன்னி  மரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே வன்னிமர வேட்டை என இன்றும் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் பல கொண்ட இந்த விஜயதசமி  நன்னாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம். 
 
சகல தேவர்களிடமும் ஆயுதங்கள் பெற்று நரகாசுரனை வென்ற மகாசக்தி, நவராத்திரி இறுதி நாளில் வெற்றி பெற்றாள். தான் படைத்த உயிர்களை அச்சுறுத்தி வந்த தீய சக்திகளை தேவி கருணை கொண்டு சம்ஹரித்தாள். 
 
பத்தாவது நாளான விஜயதசமி நாளில்ஆதிபராசக்தியாக காட்சி தந்து சகலரையும் ஆசிர்வதித்தாள். தேவர்களிடம் தாம் பெற்றுக்கொண்ட ஆயுதங்களையும் திரும்ப தந்து அமைதி கொண்டாள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்