நாளை முதல் நவராத்திரி விழா ஆரம்பம்...!

Webdunia
இந்த வருடம் நவராத்திரி பண்டிகை, நாளை முதல் அக்டோபர் 9ஆம் தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை நவராத்திரி விழாவையொட்டி,  கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். 
நவராத்திரியை முன்னிட்டு நாளை கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று  நாட்களும் சரஸ்வதியின் நாட்கள். 
 
நவராத்திரி பண்டிகையை கொண்டாட கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும்.
 
மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். இது நவராத்திரி வழிபாட்டின் சிறப்பான  அம்சமாகும். 
 
நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை நாளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். வழிபடும் இடத்தில் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. அன்று புதிய கல்வி கற்பதை ஆரம்பிப்பது சிறப்பு. 
 
நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்