சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலை போக்கும் மருத்துவ குறிப்புகள்...!

Webdunia
சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் வலிக்கு பொதுவான காரணம், சிறுநீர் குழாய் தொற்று ஆகும். சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்த தொற்றுக்கள் உண்டாகும்.
இந்த சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகும் பிரச்சனைக்கு, தகுந்த சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிருக்கே ஆபத்தை அளிப்பதாக கூட மாறலாம். எனவே இரண்டு நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை நீண்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண  வேண்டியது அவசியமாகும். 
 
சிறுநீரில் துர்நாற்றம், சிறுநீரில் இரத்தம் கலந்து இருப்பது, வாந்தி, காய்ச்சல், கீழ் முதுகு வலி, மற்றும் அடிக்கடி குளிர் போன்றவை இருந்தால் மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
 
உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். தினமும் குறைந்தது 3 லிட்டர்  தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.
 
தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
 
நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். இவை தவிர மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி தொல்லை  தருவதாக ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
 
இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வதோடு, அதற்கான வீட்டு மருத்துகளையும் தெரிந்து கொண்டு, பின்பற்றி வந்தால், சிறுநீர் கழித்தப் பின் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.
 
நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம். எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில்  சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்க வல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்