உடலில் பித்தம் சமநிலையில் இருக்க என்ன செய்யவேண்டும்...?
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (10:31 IST)
வாதம், பித்தம், கபம் மூன்றும் உடலில் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றில எந்த ஒன்று அதிகமானாலும் அதனால் வேறு சில உடல் பாதகங்கள் உண்டாகும். குறிப்பாக, பித்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பித்தம் என்பது நீர் மற்றும் நெருப்பின் தன்மைகளைக் கொண்டிருக்கும். இது உடலின் ஜீரண மண்டலத்தை முறையாகச் செயல்பட உதவுகிறது. பித்தத் தன்மை சீராக இருக்கும்போது நோயெதிர்ப்பு மண்டலமும் ஜீரண மண்டலும் சிறப்பாகச் செயல்படும். அதற்கு நம்முடைய உணவுமுறையும் சரியான உணவுமுறையும் மிக அவசியம்.
உடலில் உள்ள பித்தத்தன்மை ஜீரண மண்டலம் மற்றும் மெட்டபாலிசத்தை முறைப்படுத்த உதவுகின்றன. குடல் மற்றம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நிர்வகிப்பதாகவும் பித்தம் இருக்கிறது.
உடலில் பித்தம் அதிகமாகும்போது, அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், டயேரியா, சரும எரிச்சல், சருமத்தில் அரிப்பு ஏற்படுவது, அதிகமாக வியர்ப்பது, அதிகப்படியான தாகம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். இந்த பிரச்சினைகள் ஏற்படும் வேறு நோய்களின் அறிகுறிகளாக இருந்தாலும் அவை உடலில் பித்தம் சமநிலையில் இல்லாததால் ஏற்படுகின்றன.
ஆப்பிள், திராட்சை, சுச்சினி, லெட்யூஸ், வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், வாட்டர்மெலன், பால் ஆகிய உணவுகள் நம்முடைய உடலின் பித்த நிலையைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாகும்.
எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றில் லேசாக உப்பின் சுவை இருக்கும். அதனால் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இதுபோன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. வறுத்த உணவுகள், எண்ணெய் அதிகமுள்ள உணவுகள், உப்பு அதிகம் கொண்ட உணவுகள், காரம் மற்றும் புளிப்புச் சுவை கொண்ட உணவுகளை அதிகமாக எடுக்கக் கூடாது.
எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றில் லேசாக உப்பின் சுவை இருக்கும். அதனால் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இதுபோன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.