சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெய்யைத் தான் பயன்படுத்துவார்கள். இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எலுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நில ஆவாரை பொடி இரவில் ஒரு டம்ளர் வெந்நீரில். ஒரு ஸ்பூன் நில ஆவாரை பொடி கலந்து எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டால் பத்து மணிக்கு குடிங்க காலை ஏழு மணிக்கு வயிறு சுத்தமாகி விடும் இன்னொரு மருந்து காலை எலுமிச்சை சாறு உப்பு கலந்து தண்ணீர் ஒரு லிட்டர் சேர்த்து கொதிக்க வைத்து கொஞ்சமாக குடித்து வந்தால் வயிறு சுத்தமாகி விடும்.