தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள் என்ன...?

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:54 IST)
பட்டாம் பூச்சி தோற்றத்தில் உள்ள தைராய்டு சுரப்பு சரியான அளவைவிட குறைந்து சுரந்தால், ஹைப்போதைராய்டு என்பார்கள். இதுவே அதிகமாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டு எனக் கூறுவார்கள்.


முன் கழுத்து வீங்கி இருந்தால் காய்ட்டர் என்ற நோய் எனச் சொல்வார்கள். இந்த தைராய்டு பிரச்னைகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட கூடாது. சற்று கவனத்தில் கொண்டு தக்க சிகிச்சை எடுப்பது நல்லது. பெண்களை மட்டுமே தைராய்டு தாக்கும் என நினைக்க வேண்டாம். ஆண்களுக்கும் தைராய்டு பிரச்னை வரும். ஆனால், அது மிக குறைவு.

அதிகமாக வியர்த்தல் பதற்றம் படபடப்பு கை நடுக்கம் தூக்கம் வராமல் சிரமம் அனுபவித்தல் முடி உதிர்வு சருமம் தளர்தல் தொடை, தோள்ப்பட்டை தசை தளர்தல் அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னை, மாதவிடாய் பிரச்னை எடை குறைதல், மரபியல் வழியாக தொற்று நோய், அயோடின் சத்து குறைபாடு, காரணம் தெரியாமலும் இருக்கலாம்.

பெண்கள் 50 வயது உள்ளவர்கள் ஆட்டோ இம்யூன் நோய்கள் குடும்பத்தில் இருந்தால் அப்படியே மரபியலாக வருதல். உணவுகள் சாப்பிட வேண்டியவை: கடல் மீன்கள், நன்னீர் மீன்கள், குடம்புளி பயன்படுத்தி செய்யும் மீன் குழம்பு, தானியங்கள் காய்கறிகள், பால், முட்டை, யோகர்ட், சத்து மாவு கஞ்சி.

ஹைபோதைராய்டு, முன் கழுத்து வீக்கம் மற்றும் ஹைப்பர்தைராய்டு இருப்பவர்கள்… தவிர்க்க... ஃபாஸ்ட் ஃபுட் பேக்கரி உணவுகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சோளம் ஆளிவிதைகள் சர்க்கரைவள்ளி கிழங்கு, முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், புரோக்கோலி, சோயா சோயா கலந்த உணவுகள் அனைத்தும் தவிர்க்க வேண்டும்.

யோக பயிற்சிகள் மற்றும் தியானம் சுரப்பிகளின் செயல்பாட்டை சீர் செய்யும் . தியானம் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். மருத்துவர் ஆலோசனையுடன் சரியான அளவில் மருந்தை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்