பசலைக்கீரை வகைகளில் கொடிப்பசலை, வெள்ளைப் பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, சிலோன் பசலை போன்றவைகள் உள்ளன.
பசலைக்கீரையை நாம் அதிக அளவில், உணவில் பயன்படுத்துவதால், ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.
பசலைக்கீரை கண்களுக்கு அதிக நன்மையை தருகின்றது. இந்த பசலைக்கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு ஆகியவையும் மிக விரைவில் நீங்குகின்றது.
பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, ஆஸ்துமா, பருக்கள் முதலியவற்றையும் பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் ஏ குணமாக்கும். பசலைக்கீரையை சூப், பொரியல், அவியல், பச்சடி என்றும் தயாரித்து சாப்பிடலாம்.