அதிக வாசனை கொண்ட இலவங்கப்பட்டையின் மருத்துவகுணங்கள் என்ன...?

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (17:06 IST)
இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என அழைக்கபடுகிறது. பட்டை சேர்த்த உணவு பொருள்கள் அதிக நறுமணத்துடனும், மருத்துவ குணங்கள் நிரம்பியும் இருக்கும்.


இலவங்கப்பட்டை அதிக வாசனை கொண்ட இதை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுக்கிறது.

பட்டையிலுள்ள பினால் என்ற வேதிப் பொருள் வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.

பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்