முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன பலன்கள்...?

புதன், 1 ஜூன் 2022 (11:19 IST)
முருங்கை விதை பல வியாதிகளை நெருங்க விடாது. பல நோய்களை குணப்படுத்தும். முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.


கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும்.

பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும்.

தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரும்போது ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும். உயிர்த்துகளின் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் வேகமும் அதிகரிக்கும்.

பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும்.

முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஜ்ஜைகளை பலப்படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்