அம்மான் பச்சரிசி மூலிகையின் மருத்துவகுணங்கள் என்ன...?

Webdunia
புதன், 25 மே 2022 (12:32 IST)
அம்மான் பச்சரிசி வெள்ளி பஸ்பம் என்று அழைக்கப்படுகிறது. வேர்கள் முதல் பூக்கள், இலைகள் காய்கள் வரை, அனைத்து பகுதிகளுமே, பயனுள்ள தாவரம்.


செடியின் தண்டுகளை உடைத்தால் பால் வடியும். அந்தபாலில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.  அம்மான் பச்சரிசி செடியில் பலவகை உள்ளது.

அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைக்கும் பொழுது வருகின்ற பாலில், அதிகளவு கால்சியம், அஸ்ட்ரிஜண்ட், டோனிக் போன்றவை காணப்படுகிறது. வயிற்றுபுண், வாய்புண், தோல் நோய்களுக்கு மருத்தாகிறது.

அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் கருமையான இடங்களில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி  வந்தால், இழந்த பொலிவை திரும்பவும் பெற முடியும்.

அம்மான் பச்சரிசி மலமிளக்கியாகவும் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும் உடலிலுள்ள வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. இதனுடைய இலையை அரைத்துப் பூசினால் படை குணமாகும். இந்த மூலிகை வாதம் மற்றும் பிரமேகம் போன்றவற்றை சமன் செய்து உடலை சீராக்கும்

வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும், சிறந்த மலமிளக்கியாகவும், வறட்சியைப் போக்கவும், நாக்கு உதடு போன்றவற்றில் உள்ள வெடிப்பு புண்களை ஆற்றவும், உடலின் வெப்பத்தை தணிக்கவும் இது பயன்படுகிறது.

அம்மான் பச்சரிசி உடன் தூதுவளை அரைத்து துவையலாக சாப்பிட உடம்பு பலம் பெறும். மேலும் இது உடம்பு எரிச்சல் நமைச்சல் தாது இழப்பு போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

அம்மான் பச்சரிசி பூவுடன் இப்போது 30 கிராம் எடுத்து  பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்